கொரோனா நிலவரத்தால் மன உளைச்சல்..குளியலறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழர்!!

லண்டன் ஹவுன்சிலோவில் தமிழ் இளைஞர் ஒருவர், குழியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் பிரபல தமிழ் ரஸ்டோரன் ஒன்றில் சமையல் ஆளாக வேலை பார்த்து வந்துள்ள நிலையில், லண்டன் கொரோனா நிலவரம் காரணமாக மிகுந்த மன மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இருப்பினும், கடை உரிமையாளர் மிகவும் கவனமாக அவரை பாதுகாத்து வந்ததோடு, மருத்துவ ஆலோசனைகளை பெறவும் உதவி செய்து வந்துள்ளார்.இந் நிலையில், உணவை வாங்கி வருவதற்கு என்று அவர் புறப்பட்டு சென்ற இடைவெளியை பயன்படுத்தி. அந்த தமிழ் இளைஞர் குழியல் அறை சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.