1,500 போதை மாத்திரைகளுடன் திருகோணமலையில் சிக்கிய இளம் பெண்!

திருகோணமலையில் 1,500 போதை மாத்திரைகளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிலாவெளிப் பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. 33 வயதான இளம்பெண்ணொருவர் மீட்கப்பட்டார்.திருட்டு சந்தேகநபர் ஒருவரை கைது செய்த பொலிசார், அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டில் சோதனை நடத்தினர். இதன்போது, விற்பனைக்கு தயாராக வீட்டிலிருந்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.கைதான பெண் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவாரென தெரிவிக்கப்டுகின்றது.