பொதுமக்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.!!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர அலுவலகம் நாளை முதல் வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் மீண்டும் திறக்கப்படும். அதேவேளை, திணைக்களத்தின் நாரஹேன்பிட்டிய அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.திணைக்களத்தின் அனைத்து மாவட்ட அலுவலகங்களும் திறந்திருக்கும் என்றும், ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் முன் அனுமதி பெறுமாறு பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர்.