கொரோனா தடுப்பூசி குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்..!!

உலகில் முதன் முறையாக பயனுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்று, 90 வீதத்துக்கும் அதிகமான மக்களை கொரோனாவில் இருந்து தடுக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.ஆரம்ப பகுப்பாய்வு இதனை காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


அமெரிக்காவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் மற்றும் ஜேர்மனின் பயோஎன்டெக் என்ற நிறுவனம் ஆகியன இதனை அறிவித்துள்ளன.இந்த தடுப்பூசி ஏற்கனவே ஆறு நாடுகளில் 43இ500 பேருக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளது.இதன்போது பாதுகாப்பு பிரச்சனைகள் எதுவும் எழவில்லை. இதனையடுத்து இந்த தடுப்பூசியை நவம்பர் மாத இறுதிக்குள் பயன்படுத்த அவசர ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க குறித்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அத்துடன் 2020ம் ஆண்டு இறுதிக்குள் 50 மில்லியன் தடுப்பூசிகளையும், 2021ம் ஆண்டின் இறுதியில் சுமார் 1.3 பில்லியன் தடுப்பூசிகளையும் வழங்க முடியும் என்று மருத்து உற்பத்தி நிறுவனமான ஃபைசர் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.இதில் இங்கிலாந்து 30 மல்லியன் தடுப்பூசிகளை ஏற்கனவே கோரியிருக்கிறது. இருப்பினும் இந்த தடுப்பூசிகளுக்கு சில இருப்பிட சவால்கள் உள்ளன.குறிப்பாக இந்த தடுப்பூசி மைனஸ் 80 செல்சியஸூக்கு குறைவான தீவிர குளிர் சேமிப்பில் வைக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.