கொரோனா பீதியினால் இலங்கையில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட இரு கிராமங்கள்..!!

கம்பாஹா மாவட்டத்தில் கந்தான மற்றும் மகாபகே பொலிஸ் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா நோயாளிகள் அப்பகுதியிலிருந்து அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து முன்னதாக அங்குலானவில் 2 கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.மேலதிக அறிவிப்பு வரும் வரை இந்த பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.