கொழும்பு மாநகரில் தொடரும் கொரோனா ஆபத்து..சற்று முன்னர் வெளியான பிந்திய புள்ளி விபரங்கள்.!!

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக நேற்றைய நிலவரப்படி மொத்தம் 2,496 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அவற்றில் 90ற்க்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு மாநகரசபையின் பணியாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொற்றுக்கள் கொழும்பு 1 முதல் கொழும்பு 15 வரை பதிவாகியுள்ளன.கொழும்பு வடக்கிலிருந்து 800ற்க்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஜிந்துப்பிட்டி பகுதியில் இருந்து பதிவாகியுள்ளனர்.பொரல்ல பகுதியில் இருந்து குறைந்தது 400 தொற்றாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.தொற்றுக்கு உள்ளான மாநகரசபையின் பெரும்பாலான ஊழியர்கள் சுகாதாரத் துறை, குப்பை சேகரிப்பு மற்றும் பல துறைகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சேவைத் துறைகளில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.