14,000 ஐ எட்டுகிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.!!

இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13,929 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 510 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,447 ஆக உயர்ந்துள்ளது.தற்போது 3 வெளிநாட்டினர் உட்பட 5,609 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று 562 பேர் முழுமையான குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,285 ஆக உயர்ந்துள்ளது.297 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.இலங்கையில் இதுவரை 35 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. நேற்று 78 வயதான ஒருவர் உயிரிழந்தார்.