கிராம நிர்வாக உத்தியோகஸ்த்தர் கொலையில் வசமாக மாட்டிய கொலையாளி.!! விசாரணையில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகஸ்த்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சந்தேகமே பிரதான காரணம் என கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிராக சம்பவ இடத்தில் நின்றிருந்த இளைஞன் ஒருவன் அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனது இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை தான் வளர்ப்பதற்குத் தருமாறு மனைவியிடம் நிர்வாக கிராம அலுவலகர் கேட்டு வந்துள்ளார். அதுதொடர்பில் எனக்கு எழுந்த சந்தேகம், அவரைக் கொலை செய்யுமளவுக்குத் தூண்டியது’ என்று சந்தேக நபர் விசாரணையில் கூறியுள்ளாராம்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம அலுவலகராகக் கடமையாற்றும்விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் கடந்த 3ம் திகதி இரவு 7 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டருந்தபோது கள்ளியடி பகுதியில் கொலை செய்யப்பட்டார்.சம்பவம் தொடர்பில் இலுப்பக்கடவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அரிசி ஆலை ஒன்றை அமைப்பதற்காக பெண் கிராம அலுவலகர், நிர்வாக கிராம அலுவலகரிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை கைமாற்றாக வாங்கியுள்ளார்.அரிசி ஆலையில் வேலைக்கு என இளைஞர் ஒருவரை சந்தேக நபர் அழைத்து வந்து வைத்திருந்துள்ளார்.சம்பவ தினைத்தன்று கிராம அலுவலகர் இளைஞனையும் அழைத்துக் கொண்டு சென்றுதான் நிர்வாக கிராம அலுவலகரை சந்தேக நபர் மண்வெட்டியால் தாக்கியுள்ளார்.நிர்வாக கிராம அலுவலகரை அம்புலன்ஸ் வந்து ஏற்றிய போது முச்சக்கர வண்டியில் வந்து இறங்கிய சந்தேக நபர், நோட்டமிட்டுள்ளார். அங்கு கூடியிருந்தவர்கள் கிராம அலுவலகர் வெட்டப்பட்டுள்ளார் என்று தெரிவித்த போது, ‘இல்லை இல்லை அவருக்கு யாரோ கட்டையால் அடித்துள்ளனர்’

என்று சந்தேக நபர் கூறியுள்ளார்.மறுநாள் இலுப்பைக்கடவை இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்களை தனது முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று விசாரணை நடவடிக்கைகளுக்கு உதவுவதாக பாசாங்கு செய்துள்ளார்.இந்த நிலையிலேயே நேற்றுமுன்தினம் சந்தேக நபரது வீட்டுக்குச் சென்ற பொலிஸார், அவரது வீட்டில் வேலைக்காக தங்கியிருந்த இளைஞனை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.அந்த இளைஞன் நடந்தவற்றை கூறியதால் பெண் கிராம அலுவலகரின் கணவரை கைது செய்தனர் பொலிஸார்.கொலைக்குப் பயன்படுத்திய மண்வெட்டி பிடி மற்றும் உடை ஒன்றும்பொலிஸாரால் மீட்கப்பட்டன. சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட குருதிக்கறையுடனான மரத்துண்டு மண்வெட்டிப்பிடியில் உடைந்த பகுதியோடு பொருந்தியுள்ளது.இந்த நிலையில் முதலாவதாகக் கைது செய்யப்பட்ட இளைஞன் அரச சாட்சியாக மாறுவதற்கு சம்மதித்ததால், சந்தேக நபருக்கு எதிரான வழக்கை விரைந்து முடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சந்தேக நபர், சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை பெறப்பட்ட நிலையில் மன்னார் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சிறுவன் ஒருரவரைக் கைது செய்து பொலிஸார் சித்திரவதைக்கு உள்படுத்துகின்றனர் என்று சிறுவர் பாதுகாப்பு பிரிவு, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்று அறிவித்து விசாரணைகளைத் தடுக்க பல்வேறு வழிகளில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.