அனைத்து அரசாங்க, தனியார் பாடசாலைகளையும் மீளத் திறப்பது தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்..!!

இலங்கையில் மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்துப் பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே திறக்கப்படவுள்ளன.முழுமையாக அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் இரண்டு கட்டங்களாக பாடசாலை வகுப்புகளை நடத்திச் செல்வது குறித்து ஆராயப்படுகிறது.எவ்வாறாயினும்m கொரோனா பரவல் தொடர்பில் அப்போதுள்ள நிலைமையை வைத்து அதற்கேற்ப இறுதி நேர முடிவுகள் மேற்கொள்ளப்படுமென கல்வியமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டன.தனியார் பாடசாலைகளையும் அந்த காலப்பகுதியில் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனினும், 23ம் திகதியை அண்மித்த நாட்களில் நாட்டில் உள்ள கொரோனா இடர்நிலைமையினை கருத்தில் கொண்டு முடிவுகள் மாறலாம் எனவும் கூறப்படுகின்றது.