ஐ.பி.எல் 2020: ஹைதராபாத்தை அபார வெற்றியுடன் வீழ்த்தி முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது டெல்லி!!

ஐ.பி.எல் ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான 2ஆவது நேரடி தகுதிப் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 178 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இராண்டாவது அணியாக இறுதி போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் முதன்முறையாக டெல்லி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மாணித்தது.இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஷிக்கர் தவான் 78 ஓட்டங்களையும் ஹெட்மேர் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் சந்திப் சர்மா, வோல்டர், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனைத் தொடர்ந்து, 190 ஓட்டங்கள் என்ற வெற்றியிழக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஹைதராபாத் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.இதனால், டெல்லி அணி 17 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக கேன் வில்லியம்சன் 67 ஓட்டங்களையும் அப்துல் சமாட் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.டெல்லி அணியின் பந்துவீச்சில் ரபாடா 4 விக்கெட்டுகளையும் ஸ்டொய்னிஸ் 3 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டெல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.போட்டியின் ஆட்டநாயகனாக 38 ஓட்டங்களையும் 3 விக்கெட்டுகளையும் சாய்த்த டெல்லி அணியின் சகலதுறை வீரர் ஸ்டொய்னிஸ் தெரிவு செய்யப்பட்டார்.