கொரோனாவினால் மனிதர்களுக்கு ஏற்படப் போகும் பேராபத்து..கொத்துக் கொத்தாக கொல்லப்படப் போகும் உயிரினம்!!

கொரோனா அச்சத்தால் பண்ணைகளில் வளரும் 17 மில்லியனுக்கும் அதிகமான மிங்க் எனப்படும் கொறி வகை விலங்குகளைக் கொல்ல டென்மார்க் அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள புள்ளி விவரங்களின்படி, 216 மிங்க் பண்ணைகளில் கொவிட் -19 நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதிலும், மிங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவிய மரபுணு மாற்றமடைந்த, அதிக வீரியமுள்ள கொரோனா வைரஸ் 214 பேரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களிடமிருந்து மிங்க்குகளுக்குப் பரவும் கொரோனா வைரஸ் அந்த விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றும்போது மரபணுவில் மாற்றமடைந்து இன்னும் ஆபத்தாக உருமாறிவிடுகிறது.அவ்வாறு உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் எதிர்கால தடுப்பூசியின் செயல்திறனை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதால் டென்மார்க் பண்ணைகளிலுள்ள மிங்க்கள் கொல்லப்படவுள்ளன.இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் – பண்ணைகளில் வளர்க்கப்படும் மிங்குகள் சுகாதார அபாயமாக உருவெடுத்துள்ளன. மிங்க்குகளை அழிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். மிங்க்குகளை அழிக்க இராணுவம் மற்றும் காவல் துறை களமிறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.