இலங்கையில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..நேற்று மட்டும் 510 பேருக்குத் தொற்று..!!

இலங்கையில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 510 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 213 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 183 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை 72 பேர் வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் என்றும் 12 பேர் குருநாகல் மாவட்டத்தையும் 09 பேர் காலி மாவட்டத்தையும் சேந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேலும், கழுத்துறையைச் சேர்ந்த 06 பேரும் கேகாலை மாவட்டத்தில் 04 பேரும் அடையாளம் கண்டியில் 03 பேரும் நுவரெலியாவில் 02 பேரும் காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு மட்டக்களப்பு, மொனராகலை, பதுளை, திருகோணமலை மற்றும் அம்பாறையில் தலா ஒருவரும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.