கொரோனாவிற்கு அஞ்சி மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சாரதி.!!

தனக்கு கொரோனா தொற்று எற்படலாமென்ற அச்சத்தில் பேருந்து சாரதியொருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அகலவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இ.போ.ச பேருந்து சாரதியான அவரது பேருந்தில் பயணித்த சிலர் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருக்கலாமென்ற அச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மத்துகமவிலிருந்து நாகொட வைத்தியசாலைக்கு செல்லும் சில பணியாளர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியதையடுத்து, அவர்கள் தனது பேருந்தில் சென்றிருக்கலாமென்ற அச்சத்தில் நேற்று (8) வீட்டில் எதிரேயிருந்த இறப்பர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.