இலங்கையில் சற்று முன்னர் மேலும் அதிகரித்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை..!!

இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது.

கொவிட் – 19 நோய்த் தொற்று காரணமாக 78 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் கொரோனாவால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் நான்கு உயிரிழப்புக்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.