இலங்கையில் தீவிர வேகமெடுக்கும் கொரோனா..!! இலங்கை மக்களுக்கு விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றில் இலங்கை தற்போது மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் சுசீ பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.சில இடங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் ஏனைய பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் வாழ்க்கையையும் தொழில்களையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய தொற்றுப் பரம்பல் நாளுக்கு நாள் மாறி வருவதால், மக்களின் வாழ்க்கை முறையை பேணும் வழிமுறைகள் கருதி சுகாதார அமைச்சு நான்காவது எச்சரிக்கை மட்டத்தை பிரகடனம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த நிலையில், தொற்றுப் பரம்பல் நீண்ட காலம் நீடிக்கலாம் எனவும் பொதுச் சுகாதார சேவைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் சுசீ பெரேரா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.