யாழில் இப்படியும் நடக்கின்றது..தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பத்துடன் மோதியவர்களுக்கு நேர்ந்த கதி..!!

பருத்தித்துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பத்துடன் அடிதடியில் ஈடுபட்ட 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள், அவர்களை தனிமைப்படுத்துவதற்கு நேற்று மாலை நடவடிக்கை எடுத்துள்ளனர்கொரோனா தொற்றாளர் ஒருவருடன் பழகியமையினால் பருத்தித்துறையில் குடும்பம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், அந்த குடும்பத்தினர் யாழ்ப்பாணத்திற்கு கொரோனா கொண்டு வருவதாக குற்றம் சுமத்தி அந்த பிரதேசத்தை சேர்ந்த 2 குடும்பத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்தச் சம்பவத்தின் பின்னர் பொலிஸார் குறித்த இடத்திற்கு வருகைத்தந்துள்ள நிலையில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதன் பின்னரே, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.