கொரோனாவினால் அல்லலுறும் பிரித்தானிய மக்களுக்கு கிடைத்த பெருமகிழ்ச்சி தரும் செய்தி..!! அடுத்த வாரத்தில் வரும் மிக முக்கிய அறிவிப்பு..!!

இங்கிலாந்தில் அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதற்கான திட்டங்களை சுகாதாரச் செயலாளர் மாட் ஹான்காக் அடுத்த வாரம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள மக்களை பாதுகாக்க கிறிஸ்துமஸ் தினம் மற்றும் கிறிஸ்துமஸ்க்கு அடுத்த நாளான பொக்ஸிங் தினத்தன்று அந்தந்த பகுதியில் பொதுவான மருத்துவ சிகிச்சையை வழங்கும் குடும்ப மருத்துவர்கள் மூலம் தடுப்பூசி விநியோகிக்கப்படும் என உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.குடும்ப மருத்துவர்கள் வாரத்தில் ஏழு நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தடுப்பூசி வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்த உதவும் முக்கிய நகரங்களில் கொரோனா தடுப்பூசி மையம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.தடுப்பூசி வழங்க குடும்ப மருத்துவர்களுக்கு உதவும் வகையில் 3000 நடமாடும் குழுக்களும் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.