முல்லேரியா மருத்துவமனைக்கு சீனாவிலிருந்து வரப்போகும் பீ.சீ.ஆர் இயந்திரம்..!!

முல்லேரியா மருத்துவமனைக்கு (கொழும்பு கிழக்கு ஆதார மருத்துவமனை) சீனாவின் BGI Genomics நிறுவனம் பி.சி.ஆர் இயந்திரத்தை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதை ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள பி.சி.ஆர் இயந்திரத்திற்கு ஏதேனும் நேர்ந்தால், மருத்துவமனை அந்த இரண்டாவது பி.சி.ஆர் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும்.மருத்துவமனையில் உள்ள பி.சி.ஆர் இயந்திரமானது பல நாட்களாக செயலற்ற நிலையில் இருந்ததுடன், அதனை சீன தொழில்நுட்பக் குழுவினர் சீர் செய்திருந்தனர்.அதேவேளை கடந்த ஜுலை மாதம் இலங்கை சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நாட்டு மக்களுக்கு உடனடியாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.மாதத்திற்கு 68 ஆயிரம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற போதிலும் நாள் ஒன்று 1000 – 1500 PCR பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.