முடிந்தது நீண்ட இழுபறி..அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பிடன் பெரு வெற்றி..!! அவமானகரமான தோல்வியுடன் பதவியிலிருந்து வெளியேறுகிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 273 தேர்தல் சபை வாக்குகள் இருப்பதாக பிபிசி கணித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றார் ஜோ பிடன். ஓய்ந்தது அமெரிக்க தேர்தல் இழுபறி. அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்கிறார் பென்சில்வேனியாவில் பிடன் தொடர்ந்து முன்னிலை. 30000 வாக்கு வித்தியாசத்தில் டிரம்ப் பின்னடைவு. 3337069 மக்கள் வாக்குகளை பிடன் பெற்றுள்ளார். 3307089 மக்கள் வாக்குகளை டிரம்ப் பெற்றுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கடந்த 3ம் தேதி முதல் நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. ஜோ பிடன் 273 ஓட்டுகளை பெற்றுள்ளார். அங்கு வெற்றிக்கு தேவை 270 ஓட்டுகள் ஆகும். 20 ஓட்டுகளை கொண்ட பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக சற்று முன்பு அறிவிப்பு வெளியானது. எனவே அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ளார் ஜோ பிடன்.மேலும் அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஆப்பிரிக்க அமெரிக்க வம்சாவளி பெண் ஒருவர் துணை அதிபராக பதவியேற்க உள்ளார். ஆம், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவிக்கு வருகிறார். இவரது தாய் தமிழகத்தின் மன்னார்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவராகும்.அமெரிக்க தேர்தலில் நானே அதிக அளவில் வென்றேன் என்ற ஒற்றை வரியை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப். முன்னதாக, மற்றொரு பதவில் தனது வழக்கறிஞர்கள் அமெரிக்க நேரப்படி காலை 11.3 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் டிரம்ப். பிறகு அந்த பதிவை நீக்கி விட்டு, மிகப்பெரிய செய்தியாளர் சந்திப்பு நடக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

பென்சில்வேனியா மாகாணத்தில் கிட்டத்தட்ட வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது. அந்த மாகாணத்தில் ஜோ பைடனுக்கு சாதகமாக முடிவுகள் வந்தால், அவர் அமெரிக்க அதிபராவது கிட்டத்தட்ட உறுதியாகி விடும்.

இந்த நிலையில், டிரம்ப் தரப்பு நடத்தவிருக்கும் செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.டிரம்ப் தரப்பின் செய்தியாளர் சந்திப்பு, இன்னும் சில நிமிடங்களில்..அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தரப்பு, இன்னும் சில நிமிடங்களில் பென்சில்வேனியாவில் செய்தியாளர்களை சந்திக்கப் போகிறது. இந்த தகவலை டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது வழக்கறிஞர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள் என்று முதலில் கூறியிருந்த டிரம்ப், அந்த ட்விட்டர் பதிவை நீக்கினார்.