வடக்கில் இன்று நடந்த பிசிஆர் பரிசோதனையில் மேலுமொருவருக்கு கொரோனா!!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 337 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நபர் கொழும்பை சொந்த இடமாகக் கொண்டவர். தற்போது மணமுடித்து ஜெயபுரத்தில் இருந்தாலும் தொழில்வாய்ப்பு நிமித்தமாக கொழும்பில் இருப்பவர். கடந்த மாதம் 25ம் திகதியன்று ஜெயபுரம் தன்னுடைய வீட்டிற்கு வந்தவர். வீடு திரும்பிய நாளில் இருந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.