ஆஞ்சநேயர் வழிபாடும் ஹனுமனுக்குப் பிடித்த வழிபாட்டுப் பொருட்களும்..!

மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த கடவுள்களில் ஒருவர் ஆஞ்சநேயர். இந்து புராணங்களின்படி சிவபெருமான்தான் விஷ்ணுவிற்கு உதவுவதற்காக அவருடைய இராம அவதாரத்தில் ஆஞ்சநேயராக வந்ததாக உள்ளது. இராமாயணத்தில் ஆஞ்சநேயர் புரிந்த சாகசங்களும், இராமர் மீது அவர் கொண்டிருந்த பக்தியும், சீதை மீது அவர் கொண்டிருந்த மரியாதையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை. கடவுள்களிலியே மிகவும் எளிதாக மனம் இறங்கக்கூடிய கடவுள்கள் ஆஞ்சநேயரும், விநாயகரும் தான். எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து வழிபட்டாலே ஆஞ்சநேயரின் அருளை பெற்றுவிடலாம். இங்கே ஆஞ்சநேயரின் சிறப்புகளையும், எந்த பொருட்களை கொண்டு வழிபட்டால் அவரின் அருளையும் பெறலாம் என்பதை பார்க்கலாம்.

ஆஞ்சநேயர் ஆஞ்சநேயர் தேவ கன்னிகை அஞ்சனைக்கும் வானர மகாராஜா கேசரிக்கும் பிறந்தவராவார். அஞ்சனை சிவபெருமானே தனக்கு மகனாக பிறக்க வேண்டுமென்று தவமிருந்தார், ஈசனும் அந்த வரத்தை வழங்க பிரம்மதேவர் அஞ்சனையை பெண்ணாக பூமிக்கு அனுப்பி வைத்தார். பின்னர்தான் ஈசனே அவர்களுக்கு மகனாக பிறந்து பின்னாளில் இராமபிரானுடன் இணைந்து இராவண வதத்தில் பங்கு கொண்டார்.அனுமன் இராமாயணம் வால்மீகி இராமாயணம் இயற்றுவதற்கு முன்னரே ஆஞ்சநேயர் ஒரு இராமாயணத்தை இயற்றியதாக கூறப்படுகிறது. இதுவே அனுமன் இராமாயணம் எனவும் அழைக்கப்படுகிறது. இராமயணபோரின் வெற்றிக்கு பிறகு இராமபிரானுடன் அயோத்திக்கு சென்ற ஆஞ்சநேயர் அங்கேயே தங்கி இராமனுக்கு பணிவிடைகள் செய்து வந்தார். இராமர் இறந்து வைகுண்டம் சென்றபின் இமயமலையை நோக்கி சென்ற ஆஞ்சநேயர் அங்கே இராமருடைய பெயரை சொல்லி தியானம் செய்துகொண்டே இருந்தார். அப்போது அவர் தன் நகங்களால் குகையின் சுவர்களில் இராமாயண கதையை எழுதியதாகவும் அதுவே அனுமன் இராமாயணம் எனவும் நம்பப்படுகிறது.ஆஞ்சநேயரை எல்லாக் கிழமைகளிலும் வணங்கலாம். ஆனால் செவ்வாய் கிழமையும், சனி கிழமையும் ஆஞ்சநேயரை வணங்குவது கூடுதல் சிறப்பு. அந்த நாட்களில் அவருக்கு பிடித்த பொருட்களை கொண்டு வழிபட்டால் அவரின் அனுக்கிரஹம் எளிதில் கிடைக்கும்.

குங்குமம் ஒருமுறை சீதையின் அருகில் இருந்த ஆஞ்சநேயர் அவர் நெற்றியின் நடுவில் ஏன் குங்கும திலகம் இட்டிருக்கிறார் என்று கேட்டார். இந்த குங்குமம் இராமர் மீது தான் வைத்திருக்கும் அன்பு மற்றும் பக்தியின் அடையாளம் என சீதை கூற ஆஞ்சநேயரோ தன் உடல் முழுவதும் குங்குமத்தை பூசிக்கொண்டார். இதனை பார்த்த இராமர் ஆஞ்சநேயரின் பக்தியை நினைத்து மகிழ்ந்து இனி உன்னை குங்குமம் வைத்து வணங்குபவர்கள் அனைத்து வழங்களையும் பெறுவார்கள் என்னும் வரமளித்தார்.துளசி ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது துளசி செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசியை வைத்து வழிபாடு நடத்துங்கள். இது உங்கள் மனதின் சஞ்சலங்களை போக்கி அமைதியை தரும். வழிபட்ட பின் அந்த துளசியை நீங்கள் உண்ணவும் செய்யலாம். மல்லிகை எண்ணெய் ஆஞ்சநேயர் அடிப்படையிலேயே ஒரு வாசனை பிரியர். எனவே மல்லிகை எண்ணெயை வைத்து வழிப்படுவது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

மல்லிகை எண்ணெயில் குங்குமத்தையும் கலந்து அவருக்கு அபிஷேகம் செய்வது உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை வழங்கும். தேங்காய் தேங்காய் தண்ணீர் என்பது கலப்படம் இல்லாத இயற்கையின் அற்புத படைப்பாகும். தேங்காய் தண்ணீரால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்துவிட்டு தேங்காயுடன் குங்குமம் சேர்த்து அவர் பாதத்தில் வைத்து வணங்குவது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்.ஆஞ்சநேயருக்கு பிடித்த நிறம் சிவப்பாகும்.எனவே சிவப்பு சந்தனம், சிவப்பு மலர்கள் போன்றவற்றை வைத்து வழிபடுவது நலம். முக்கோண வடிவ சிவப்பு துணியில் இராமருடைய பெயரை எழுதி ஆஞ்சநேயரை வழிபடுவது உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்க செய்யும்.பிள்ளையாருக்கு எப்படி கொழுக்கட்டை பிடிக்குமோ அதேபோல ஆஞ்சநேயருக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதேபோல சுண்டல் மாலையும் பிடிக்கும். சுண்டலில் மாலைக்கட்டி லட்டு வைத்து ஆஞ்சநேயரை வணங்குவது நீங்கள் வேண்டும் அனைத்தையும் கிடைக்க செய்யும்.அனைத்து கடவுள்களுக்கும் பிடித்த மந்திரங்கள் என சில இருக்கும். ஆனால் ஆஞ்சநேயரை பொறுத்தவரை அவர் பெரிதாக நினைக்கும் இராமரை வழிப்படுவதே அவரின் அருளை பெறுவதற்கான எளிய வழி. அவர் தன் வாழ்க்கையின் பெருமையாக நினைத்தது இராமருக்காக தூது சென்றதைத்தான். அதனை கூறி வழிபடுவதே அவருக்கும் பிடித்தது. ” ஓம் இராமதூதாய நமஹ ” இந்த மந்திரத்தை 108 முறை மனதை ஒருநிலைப்படுத்தி கூறினால் அவரின் பலமும், அருளும், ஆற்றலும் கிடைக்கும்.