இலங்கையில் கொரோனாவின் கோரத் தாண்டவம் ஆரம்பம்..இன்று மட்டும் நான்கு பேர் கொரோனாவிற்குப் பலி.!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு – 10 மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயது பெண்ணொருவரும், கொழும்பு – 10 மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 69 வயது மற்றுமொரு பெண்ணும், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 67 வயது ஆணும், கணேமுல்ல பிதேசத்தை சேர்ந்த 88 வயது பெண்ணும் என நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13227 ஆக உயர்வடைந்துள்ளது.மேலும், இலங்கையில் இதுவரையில் 7723 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.