இலங்கையில் தீவிமடையும் கொரோனா!! நேற்று மட்டும் 400 பேருக்குத் தொற்று.!!

இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 400 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 203 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 101 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை 18 பேர் கேகாலை மாவட்டத்தையும் 17 பேர் குருநாகல் மாவட்டத்தையும் சேந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேலும், குருநாகல் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை காலியில் 03 பேரும் பதுளை மற்றும் இரத்தினபுரியில் தலா 02 பெரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்தோடு கண்டி, மாத்தளை, அம்பாறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, வவுனியா, அநுராதபுரம், பொலநறுவை மற்றும் மொனராகலையில் தலா ஒருவரும் 06 பொலிஸாருக்கும் 23 வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.