கொழும்பு மாநகரில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை..!!

கொழும்பில் தொடர்மாடிக் குடியிருப்புகளில் வசிப்போர், அருகிலுள்ள வீடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தொற்றுநோயியல் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.அடுக்கு மாடிக் குடியிருப்புக்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம் என்று தொற்றுநோயியல் பிரிவு பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இங்கு பல தொற்றாளர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நிலையில் இருக்கக்கூடும்,எனவே, தொடர்மாடி வீட்டுத்தொகுதிகளில் வசிக்கும் மக்களும், நெரிசலான பகுதிகளில் வசிப்பவர்களும் மற்ற வீடுகளுக்கு செல்வதை முற்றிலுமாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக வீடுகளில் உள்ள முதியவர்கள் பாதிப்படைந்து உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர எச்சரித்துள்ளார்.