திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாறு..நல்லூர் மந்திரி மனைக்குள் புதைந்து கிடக்கும் மர்மம்..!! (பலரும் பார்த்திராத காணொளித் தொகுப்பு)

தமிழர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல தமிழர் வரலாற்று சின்னங்கள் அழிவடையும் நிலையில் கேட்பார் அன்று கிடக்கின்றன. மந்திரி மனையின் மத்திய பகுதி 15 ஆம் நூற்றாண்டளவில் “பரனிருபசிங்கன்” என்பவரால் கட்டப்பட்டது. இந்த கட்டமைப்பை மிகவும் நுட்பமாக பல்வேறு கலை அம்சங்களுடன் பாதுகாப்பைக் கருதிக் கட்டப்பட்டதாக நம்புகிறார்கள். பாதுகாப்பிற்காகவும், அவர்களுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காகவும் அமைக்கப்பட்ட நிலவறைச் சுரங்கத்தின் நுழைவாயிலாகவும் காணப்படுகின்றது.இங்கு நிலவரைச் சுரங்கங்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் முகப்பு பகுதி டச்சுக்காலப் பகுதியில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதுபற்றிய முழுமையான காணொளி இனை நாம் தேசாந்திரிகளின் (We Are Voyagers) எனும் You Tube பக்கத்தில் பதிவேற்றி உள்ளனர்.

முழுமையான காணொளி இணைப்பு: