பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு..!!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இதன்போது 50 சதவீத மாணவர்களை பாடசாலைகளுக்கு வரவழைத்து நேரமாற்றம் இன்றி, சமுக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கல்வி செயற்பாடுகளை நடத்துவது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.எனினும், இது தொடர்பான இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அனைத்து மாகாண, வலய மற்றும் கோட்டக் கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தக் கலந்துரையாடலில் க.பொ.த.சாதாரண தர பரீட்சை தொடர்பிலும் முடிவு எடுக்கப்பட்டது.இதேவேளை மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இம்மாதம் 9ம் திகதி ஆரம்பமாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், கொவிட்19 பரவல் காரணமாக 2 வாரங்களுக்கு இந்த நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.