மாவட்டச் செயலக கூட்டத்தில் கலந்து கொண்ட கோப்பாய் பிரதேச செயலரை தனிமைப்படுத்த உத்தரவு.!!சுகாதார வைத்திய அதிகாரி அதிரடி!!

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றய தினம் அமைச்சர்கள் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கோப்பாய் பிரதேச செயலர் மற்றும் பிரதேசசபையின் தவிசாளர் ஆகியோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 200பேர் வரையில் கலந்துகொண்ட போதிலும் ஒரு பிரதேச செயலாளர் பிரிவின் சுகாதார வைத்திய அதிகாரி மட்டுமே தற்போது இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் கடமை நிமித்தம் சென்றதற்கு தனிமைப்படுத்தல் என்பதனால், பணியாற்ற அச்சமாகவுள்ளதாக ஏனைய உத்தியோகத்தர்கள் அவசரமாக மாவட்டச் செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.இதேநேரம், இவ்வாறு தனிமைப்படுத்தல் அறிவித்தல் வழங்கப்பட்டமை தொடர்பில் பிரதேச செயலாளரும் உறுதி செய்துள்ள நிலையில், குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏனைய உயர் அதிகாரிகள் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்படுகின்றது. இதேநேரம் நேற்றைய கூட்டத்தின் சர்ச்சை ஒய்வதற்கு முன்பு நாளைய தினமும் கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதனால், இக் கூட்டத்தில் கலந்து கொள்ள சில அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.