கொரோனாவினால் கர்ப்பிணிகளுக்கு அதிக ஆபத்து.!!இதுவரையில் 80 பேருக்கு கொரோனா தொற்று.!!

நாட்டில் 80 கர்ப்பிணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிபுணத்துவ மருத்துவர் மயுரமான்ன தேவோலகே இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலையில் 28 கர்ப்பிணிகளுக்கு கொவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்கு இலக்கான கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை வழங்கும் ஒரே பிரிவு கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலை என தெரிவித்துள்ளார்.இதுவரையில் நான்கு கர்ப்பிணிகள் குழந்தை ஈன்றுள்ளதாகவும் அவர்களின் உடலில் கொவிட் தொற்று நீங்கியதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.