பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு.!!

2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி,எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 28ம் திகதி வரை 2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த சாதாரண தர பரீட்சைகள் இவ்வாறு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதனிடையே, மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளும் அண்மையில் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இதேவேளை, இலங்கையில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 30 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.