வெலிக்கடைச் சிறையில் இன்று மட்டும் 23 கைதிகளிற்கு கொரோனா தொற்று!

வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று (6) 23 கைதிகள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.22 பெண் கைதிகளும், 1 ஆண் கைதியுமே இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் நேற்று 4 பெண் கைதிகள், 2 ஆண் கைதிகள் மற்றும் சிறை அதிகாரி ஒருவர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே இன்று 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.வெலிக்கடை சிறை கைதிகள் அனைவரையும் அகுனுகொலபெலெச சிறைக்கு மாற்றுவதற்கான முடிவு நேற்று எட்டப்பட்டது.