குடும்பத் தகராறினால் தனது நான்கு பெண் பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டி தற்கொலைக்கு முயற்சித்த தாய்..!! பரிதாபமாகப் பலியான இளம் பெண்.!! ஏனையோர் உயிருக்குப் போராட்டம்..!!

திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தியதில் 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

நஞ்சருந்திய தாய் உள்ளிட்ட ஐவரையும் இன்று காலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் 16 வயதுடைய என்.விதூசிகா என்னும் சிறுமி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த தாயாரான என்.நாகேஸ்வரி (31 வயது), என்.வைஸ்னவீ (12 வயது), என்.ஐஸ்வர்யா (8 வயது) மற்றும் என். கஜவீர் (2 வயது) ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.குடும்பத்தகராறு காரணமாக தாய் தனது பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்துவிட்டு தானும் உட்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.