கொரோனா அச்சத்தினால் ஹோமாகம வைத்தியசாலையின் 5ஆவது விடுதிக்குப் பூட்டு.!!

ஹோமாகம வைத்தியசாலையின் 5 ஆவது வோர்ட்டில், நோயாளர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால், குறித்த பகுதியில் பணியாற்றிய வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.மேலும், அந்த வோர்ட்டில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதேவேளை குறித்த வோர்ட்டில் நோயாளிகளை அனுமதிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.