இலங்கையில் இப்படியும் நடக்கிறது..திருமணம் ஆகாத வேதனையில் தெருப்பிள்ளையாரை கட்டிப்பிடித்து அழுத நபருக்கு வந்த சோதனை.!!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட வழிப்பிள்ளையார் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது, சந்தேக நபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

உதவிப் பொலிஸ் அத்தியட்ச்சகர் ஜி.எஸ்.ஜெயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் ஆலயம் அமைந்துள்ள பிரதேசத்திலே வசித்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.தனக்கு நீண்ட காலமாகியும் அரச உத்தியோகம் கிடைக்கவில்லை, திருமண விடயமும் சரிவராத காரணத்தினால் வழிப்பிள்ளையாரை கட்டிப்பிடித்து மனவேதனையில் அழுததாகவும் அதனால் ஏற்பட்ட உராய்வு, மற்றும் அசைவு காரணமாக பிள்ளையாரின் உடற்பாகங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் வாக்குமூலமளித்துள்ளார்.70 வருட கால பழமை வாய்ந்த இரண்டரை அடி உயரமுள்ள குறித்த சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.குறித்த சமபவம் தொடர்பாக மட்டக்களப்பு தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு நேற்று மாலை வந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.