இலங்கையில் கொரோனாவிலிருந்து மேலும் பல நூற்றுக்கணக்கானோர் குணமடைவு..!!

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 563 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 7,186 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.இலங்கையில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12ஆயிரத்து 570ஆக காணப்படுகின்றது.மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆறாயிரத்து 623 ஆக காணப்படுகின்றது. இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 918பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.