பரபரப்பாகும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களம்..வெள்ளை மாளிகையை கைப்பற்றப் போவது யார்..? தீர்மானம் மிக்கதாக மாறும் பென்சில்வேனிய வாக்குகள்.!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என மாநில செயலாளர் கெத்தி புக்வோர் தெரிவித்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார்.பைடனுக்கு 50.4 வீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி ட்ரம்பிற்கு 47.9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.பைடன் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு ஆறு வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது.வாக்கு எண்ணும் பணிகளில் முறைக்கேடு நடந்துள்ளதாகவும் அதனால் மீள தேர்தலை நடத்துமாறும் கோரும் ட்ரம்ப், 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.அதனடிப்படையில் எலெஸ்கா மாநிலத்தில் 3 தேர்தல் தொகுதிகளும், ஜோர்ஜியா மாநிலத்தில் 16 தேர்தல் தொகுதிகளும், நெவாடா மாநிலத்தில் 6 தேர்தல் தொகுதிகளும், வட கரோலினா மாநிலத்தில் 15 தேர்தல் தொகுதிகளும் மற்றும் பென்சில்வேனியா மாநிலத்தில் 20 தேர்தல்கள் உள்ளனஆகவே இந்த ஐந்து மாநிலங்களின் முடிவுகளின் முடிவைப் பொறுத்தே இறுதி முடிவு அமையும் என கூறப்படுகின்றது.பைடன் ஓரளவு முன்னிலை வகிக்கும் நெவாடா மாநிலம் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அதிலும், குறிப்பாக 20 தேர்தல் வாக்குகளை கொண்ட பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இங்கு ஆரம்பத்தில் ட்ரம்ப் 1,08,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார்.இதனால், ஜோ பைடன் பென்சில்வேனியாவில் நிச்சயம் வெற்றி பெறுவார் என ஜனநாயக கட்சி பிரசாரக்குழு கூறுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என மாநில செயலாளர் தெரிவித்துள்ளர் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.