சிகாகோ பல்கலையின் தீவிர முயற்சிக்கு கிடைத்த வெற்றி..!! ரெம்டெசிவிர் மருந்தினால் மிக வேகமாகக் குணமாகும் கொரோனா நோயாளிகள்.!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ரெம்டெசிவிர் (remdesivir) என்ற பரிசோதனை மருந்தினால் விரைவாக குணமடைந்து வருகின்றனர் என STAT நியூஸ் செய்தி வெளிட்டிருக்கின்றது. மிக சில நாட்களில் குணமடைந்து நோயாளிகள் வீட்டிற்குச் செல்வதாக கூறப்படுகிறது.ரெம்டெசிவிர் மருந்தை வைத்து பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சோதனை குறித்து உரையாடும் வீடியோவை பெற் இந்த செய்தி வெளிட்டிருக்கிறது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.ரெம்டெசிவிர் மருந்தை வைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணமாக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் நோயாளிகளுக்கு கடுமையான சுவாச அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் இருந்தன, ஆனால் ஒரு வாரத்திற்கும் குறைவான சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையை விட்டு வெளியேற முடிந்திருக்கிறது.இந்த சோதனைக்கு தலைமை தாங்கும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் கேத்லீன் முல்லேன் வீடியோ ஒன்றில் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார்.எனினும் “இந்த தகவல் வெளியான விஷயத்தில், மருத்துவ ஆராய்ச்சியில் முன்னேற்றம் காண வேண்டிய பணிகள் தொடர்பான ஆராய்ச்சி தொடர்பாக சக ஆராய்ச்சியாளர்களுடன் உள்ளே பேசும் தவல்கள் அங்கீகாரம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு சூழலில் எந்த ஒரு முடிவுக்கும் முன்கூட்டியே வருவது என்பது விஞ்ஞான ரீதியாக ஆதாரமற்றது என்றும் சிகாகோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவைரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை என்றும் எதுவும் இல்லை.இந்த நோய்க்கு அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் பல மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகளை சோதனை முறையில் செய்து வருகிறது. அவற்றில் ஒரு மருந்துதான் ரெம்டெசிவிர்.