எமது நாளைய தலைமுறையினருக்காக தந்தையுடன் யாழ்ப்பாணச் சிறுவர்கள் செய்த முன்மாதிரியான செயல்.!! குவியும் பாராட்டுக்கள்.!

இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள்.இன்று சிறு வயதில் இவர்கள் செய்யும் சின்ன சின்ன நற்செயல்கள் தான் நாளைய உலகில் இவர்களை இவர்களை தலைவர்களாக மாற்றுகின்றது. இன்றைய பெற்றோர்கள் நமது வருங்கால சந்ததிகளுக்காக தமது பிள்ளைகளுக்கு எப்போதும் நல்வழியையே காட்ட வேண்டும்.

வீட்டில் செய்யும் சிறிய செயல்களில் தொடங்கி பாடசாலை பல்கலைக்கழகம் அலுவலகம் என அனைத்து இடங்களிலும் தமது சாதனைகளால் மட்டுமல்ல வருங்கால சந்ததிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படக்கூடிய வகையில் இன்றைய சந்ததியினரின் செயல்கள் அமைய வேண்டும்.தமது வீட்டை மட்டுமல்லாமல் அயலிலுள்ள பொது இடங்களையும் சுத்தம் செய்து பராமரிப்பது கூட ஏதோவொரு வகையில் நாட்டிற்கு உதவும் செயல் தான்.அந்த வகையில் அவர்கள் தாமாக முன்வந்து செய்யும் எல்லாவிதமான நல்ல காரியங்களை தாமும் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.தவிரவும், தவறான வழியில் போனால் அந்த இடத்தில் அதை தண்டிக்கவும் தவறக்கூடாது. ஏனெனில், இன்றைய இளைய சமுதாயமே நாளைய நாட்டின் தலைவர்களாக இருக்கப் போகின்றவர்கள். எமது மண்ணின் மைந்தர்கள் உலகில் தலைசிறந்த மனிதர்களாக இருப்பதற்கு தமது பிள்ளைகளுக்கு வழிகாட்டுவது ஒவ்வொரு பெற்றோரினதும் பொறுப்பாகும்.இங்கு பெரும்பாலான சிறுவர்கள் நாம் சொல்வதை ஒரு போதும் செய்வதில்லை பெரியோர்கள் என்ன செய்கிறார்களோ அதையே அவர்களும் செய்ய முனைகிறார்கள்.அவர்களுக்கு சிறந்த நற்செயல்களையே எப்போதும் செய்வதற்கு வழிகாட்ட வேண்டும்.இந்த வகையில், நமது அழகான தேசத்திற்காக பலரும் பல நற்செயல்களை செய்துகொண்டிருக்கிறார்கள்.இங்கு யாழ் தென்மராட்சி மீசாலையில் தமது தந்தையின் வழிகாட்டலில் வீதியோரத்தில் பயன்தரும் மரங்களை நாட்டிக் கொண்டிருக்கும் இரு சிறுவர்களைக் காணலாம். இவர்களைப் போல எல்லோரும் இது எமது தேசம்.எமது வளமான தேசத்தை அழகாகவும் எமது வருங்கால சந்ததிகளுக்காகவும் பாதுகாப்பதற்கு ஓவ்வொருவரும் முன்வந்து இவ்வாறான பயன்தரும் செயற்பாடுகளில் தாமாக முன்வந்து ஈடுபடவேண்டும் என்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.