கொழும்பு றிஜ்வே மருத்துவமனையில் 20 சிறுவர்கள் மற்றும் 12 தாய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

கொழும்பு றிஜ்வே மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றிய 20 சிறுவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதுவரை றிஜ்வே மருத்துவமனையில் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் ஜீ. வீரசூரிய தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்ட இந்த கொரோனா தொற்றாளர்களில் 12 பேர் தாய்மார்கள் எனவும் ஏனையோர் சிறுவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.அதேவேளை றிஜ்வே மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக மருத்துவமனைக்கு வருவதற்கு அச்சம் கொள்ள தேவையில்லை. மருத்துவமனையில் சிகிச்சை சேவைகள் எந்த தடையும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.