இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்…

இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரங்களும் வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கிறீங்க. பணம் வருமா? வேலையில் ஏதாவது புரமோசன் வருமா? குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை வருமா? உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறீங்களா? உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இன்றைய ராசி பலன் பதில் தருகிறது.

மேஷ ராசிக்காரங்களுக்கு இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன்ல சின்னதா பாதிப்பு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு, கவனமா இருந்துக்கோங்க. வண்டி வாகனத்துனாலயும் தண்டச் செலவுங்க வரலாம். அதனால கையிருப்பும் கரைஞ்சிடும். பிசினஸ்ல இருந்துவந்த மந்தகதி காணாம போயி இனி ஏற்றம் ஏற்படலாம். வேலை பாக்குறவங்களுக்கு இருந்த டென்ஷன் குறையும். குடும்பத்துலயும் சண்டை சச்சரவு ஏற்படறதுக்கு வாய்ப்பிருக்குது. ராசியான நிறம்: குங்குமப்பூ நிறம் அதிர்ஷ்ட எண் : 38 அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.15 மணி இரவு 7.20 மணி.ரிஷபம் பிசினஸ் டெவலப்மெண்ட்டுக்காக இன்னிக்கு நீங்க எடுத்துக்குற முயற்சிக்கு உண்டான பலன் கிடைச்சிடும். கல்யாண பேச்சுவார்த்தையில இருந்த தடை, தடங்கல் விலகிடும். கடவுள் வழிபாடு மனசுக்கு நிம்மதியை கொடுக்கும். இன்னிக்கு எந்த காரியத்தையும் சந்தோஷமா செய்வீங்க. படிப்பு சம்பந்தமா பசங்க வெளியூர் போறதா இருந்தா கொஞ்சம் தள்ளிப்போடுறது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: க்ரீம் அதிர்ஷ்ட எண் : 20 அதிர்ஷ்ட நேரம் காலை 6.30 மணி மாலை 4.00 மணி
மிதுனம் மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை எடுத்துக்குறது நல்லது. நீங்க எடுக்குற முயற்சிங்கள்ல இடைஞ்சல், தடங்கல் ஏற்பட வாய்ப்பிருக்குது. கவனமா நடந்துக்குறது நல்லது. வேலை பாக்குறவங்க சீனியர் அதிகாரிங்களை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. குடும்பத்துல இருக்குறவங்களோட சப்போர்ட் உங்களுக்கு கிடைக்கும். ஆனாலும் கூடப்பொறந்தவங்க கிட்ட சின்னதா மனக்கசப்பு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அது மாதிரியே, ஃப்ரண்ட்ஸுங்க கூடியும் மனஸ்தாபம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு, கவனமா இருங்க. அதிர்ஷ்ட நிறம் : மெரூன் அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நேரம் : மாலை 1.30 மணி முதல் இரவு 8.05 மணி.

கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க பசங்ககிட்ட படிப்புள ஆர்வம் கூடிடும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்குறதுக்கு வாய்ப்பிருக்குது. இருந்தாலும், கொரோனா பீதி இருக்குற இந்த சந்தர்ப்பத்துல யோசிச்சி முடிவெடுங்க. குடும்பத்துல இருந்த பிரச்சனைங்க காணாம போயி நிம்மதி கூடும். பிசினஸ் பண்றவங்களுக்கு, வேலை பாக்குறவங்களால பிசினஸ் அமோகமா நடக்கும். அதிர்ஷ்ட நிறம் : பச்சை அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நேரம் : காலை 10 மணி மாலை 4.20 மணி
சிம்ம ராசிக்காரங்களே, ஆஃபீஸ்ல உத்தியோகம் பாக்குறவங்களுக்கு ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருந்த ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்குது. புதுசா ஏதாச்சும் ஆரம்பிக்கிறதா இருந்தா, சொத்து பத்து வாங்குறதா இருந்தா இன்னிக்கு தாராளமா அதை பண்ணலாம். பிசினஸ்லயும் வியாபாரம் நல்லபடியா நடந்து பணப்புழக்கம் கூடிடும். அதிர்ஷ்ட நிறம் : பிங்க் அதிர்ஷ்ட எண் : 32 அதிர்ஷ்ட நேரம் : மாலை 3.30 மணி இரவு 8 மணி.

கன்னி ராசிக்காரங்களே, பெத்தவங்க கூட இருந்துவந்த மனஸ்தாபம் மறைஞ்சிடும். ஃப்ரண்ட்ஸுங்க ஒத்தாசையால இதுவரைக்கும் இருந்த கடன் பிரச்சனையும் குறையும். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல, பிசினஸ் விஷயமா வெளியூர் போறதா இருந்தா யோசிச்சி முடிவெடுங்க. இல்லேன்னா கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடுங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு வேலை மாறுதல் கிடைக்குறதுக்கும் வாய்ப்பிருக்குது. இன்னிக்கு நீங்க ரொம்ப கஷ்டமான வேலையையும் ரொம்ப ஈசியா செஞ்சி முடிப்பீங்க. அதிர்ஷ்ட நிறம்: ப்ளூ அதிர்ஷ்ட எண்: 15 அதிர்ஷ்ட நேரம் : இரவு 4 மணி இரவு 9மணி
துலாம்:இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, பிசினஸ் சம்பந்தமா பார்ட்னர் கூட அநாவசியமா வாக்குவாதம் உண்டாக வாய்ப்பிருக்குது. கவனமா நடந்துக்கோங்க. இன்னிக்கு நீங்க ரொம்பவே குழப்பம் கவலையோட திரிவீங்க. எந்த காரியத்தையும் இழுத்துக்கோ பறிச்சிக்கோன்னு தான் செய்வீங்க. கொரோனா பீதி இருக்குற இந்த நேரத்துல வெளியூர் பிரயாணம் பண்றதை அவாய்ட் பண்ணிடறது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: க்ரீம் அதிர்ஷ்ட எண் : 20 அதிர்ஷ்ட நேரம் காலை 6.30 மணி மாலை 4.00 மணி

விருச்சிகம்: இன்னிக்கு பிசினஸ் விஷயமா சமூகத்துல பெரிய மனுஷங்களோட சந்திப்பு நடக்க வாய்ப்பிருக்குது. வாய்ப்பை நல்லபடியா பயன்படுத்திக்கோங்க. சொந்தக்காரங்களால மனசு சந்தோஷப்படுற மாதிரியான சம்பவங்கள் நடக்கலாம். வீட்டோட பொருளாதார நிலைமையும் திருப்தியா இருக்கும். வீட்டுக்கு தேவையான புது சாமான்களை வாங்குறதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. உங்களுக்கு ஃப்ரண்ட்ஸுங்க சப்போர்ட்டும் பக்க பலமா இருக்கும். ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இருக்கும். அதிர்ஷ்ட நிறம் : பச்சை அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நேரம் : காலை 10 மணி மாலை 4.20 மணி
தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க குடும்பத்துல நாள் முழுக்க சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். அதனால எந்த வேலையை செஞ்சாலும் மன திருப்தியோட செஞ்ச முடிப்பீங்க. ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு ஆஃபீஸ்ல மதிப்பு கூடிடும். பணவரத்தும் தாராளமா இருக்குங்குறதுனால, கொஞ்சம் எதிர்காலத்துக்கு சேமிக்கவும் வாய்ப்பிருக்கு. சொந்தக்காரங்க மூலமா மங்களகரமான தகவல் உங்க காதுக்கு எட்டிடும். அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நேரம் : காலை 8.30 மணி இரவு 7 மணி

மகரம்:பிசினஸ் பண்றவங்களுக்கு எதிர்பாக்காம திடீர் செலவுங்க வந்து வாய்க்கும். அதனால வீட்டுலயும் சண்டை சச்சரவுங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. வாயை வச்சிக்கிட்டு கம்முனு கிடக்குறது நல்லது. எந்த விஷயத்துலயும் ஆர்வமில்லாம அசமந்தமா இருப்பீங்க. சொந்தக்காரங்க ஒத்தாசையா இருப்பாங்க. இப்ப இருக்கிற சூழ்நிலையில வேலை பாக்குறவங்க கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி நடந்துக்கிட்டா நல்லது. அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ அதிர்ஷ்ட எண் : 45 அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி இரவு 10.10
கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு வேலை பாக்குறவங்க வீட்ல கொஞ்சம் பக்குவமா பேசி பழகுறது நல்லதுங்க. பிசினஸ் சம்பந்தமா நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு ஒரளவு சாதகமான பலன் கிடைக்கலாம். எதிர்பாக்காத பணவரத்து இருக்கலாம். யார்கிட்ட இருந்தாவது உதவி ஒத்தாசையை எதிர்பாத்துக்கிட்டு இருந்தா, உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். அதனாலயே உங்களோட ஹெல்த் கண்டிஷன்லயும் கொஞ்சம் பாதிப்பு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு, கவனமா இருந்துக்குறது நல்லது. அதிர்ஷ்ட நிறம் : பிங்க் அதிர்ஷ்ட எண் : 19 அதிர்ஷ்ட நேரம் : மாலை 5.20 மணி இரவு 11 மணி

மீன ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா புதுசா ஏதாச்சம் ப்ளான் பண்ணினா அதுல ஜெயிக்குறதுக்கு வாய்ப்பிருக்குது. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்குறதுக்கு வாய்ப்பிருக்குது. கடன் பிரச்சனையும் கொஞ்சம் குறையுறதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. பசங்களும் நிலைமையை புரிஞ்சி பொறுப்போட நடந்துக்குவாங்க. இன்னிக்கு பணவரத்து தாராளமா இருக்குறதுனால, குடும்பத்துல சுபச்செலவுங்களும் கூடிடும். அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன் அதிர்ஷ்ட எண்: 21 அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.05 மணி முதல் 6.15 மணிவரை