17 வயது சிறுமியைக் கரம்பிடித்த 78 வயது கிழவன்..வெறும் ஒரு மாதத்தில் எடுத்த விபரீத முடிவு.!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனாலும், திருமணமாகி ஒரு மாதத்திற்குள், இந்த ஜோடி தனித்தனி வழிகளில் சென்றுவிட்டதாக இந்தோனேசிய ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் திருமணம் செய்துகொண்ட அபா சர்னா, மற்றும் அவரது மனைவி நோனி நவிதா ஆகியோர் கடந்த வாரம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த புதுமணத் தம்பதியினர் அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர். ஆனால், சில நாட்களுக்குள்ளாகவே அபா விவாகரத்து கடிதத்தை நோனிக்கு அனுப்பிய விவகாரம், அவர்களது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இருவருக்கு இடையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத போது ஏன் அவர் இவ்வாறு செய்தார் என்று பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரியவில்லை. இது குறித்து நோனியின் சகோதரி ஐயன் தெரிவிக்கும் போது, இருவருக்கும் இடையில் பெரிய சச்சரவுகள் போன்ற எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை.ஆனால், திடீரென்று இப்படியொரு செயலை கண்டு அதிர்ச்சியடைந்தேன். ஆச்சரியம் என்னவென்றால், இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்தபோதிலும் எங்கள் குடும்பத்திற்கு அபா சர்னாவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை.இருப்பினும், இந்த பிரச்சினை அபா சர்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து வந்துள்ளது. அவர்கள் திருமணத்தை எதிர்த்ததாக தோன்றுகிறது என்று அவர் கூறியுள்ளார். திருமணத்திற்கு முன்னர் நோனி கர்ப்பமாக இருந்ததால் அந்த தம்பதியினர் பிரிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இருப்பினும், இந்த குற்றச்சாட்டினை நோனி சகோதரி ஐயன் மறுத்துள்ளார்.

திருமணத்தின் போது அபா ஒரு மோட்டார் சைக்கிள், மெத்தை, கிளோசெட் மற்றும் இந்தோனேசியா பணம் RM 2,819 ஆகியவற்றை நோனிக்கு கொடுத்திருந்தார்.இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த வரதட்சணை பொருட்கள் ஒரு டிரக் மூலம் திருப்பி கொண்டு செல்லப்பட்டன. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மற்றொரு சம்பவத்தில், இந்தோனேசிய நபர் ஒருவர் தனது தோழிகள் இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.காளிமந்தனின் ஏர்டாராப்பில் நடந்த திருமண விழாவின் புகைப்படங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் வைரலாகின. அந்த நபர் மணப்பெண்களின் குடும்பங்களுக்கு வரதட்சணையாக ஒரு நல்ல தொகையை செலுத்தியிருந்தார். இந்தோனேசியாவில், மணமகன் மணமகளின் குடும்பத்திற்கு வரதட்சணை கொடுப்பது ஒரு பொதுவான நடைமுறையாகும்.