யாழ்.கொடிகாமம் – வடமராட்சி வீதி திருத்தப் பணியில் கோரவிபத்து.!! வாகனச் சக்கரத்திற்குள் வீழ்ந்து பரிதாபமாகப் பலியான தொழிலாளி..!!

யாழ்.வடமராட்சி முள்ளிப் பகுதியில் வீதி திருத்த பணிகளின்போது ரோலர் வாகனத்தின் சக்கரத்திற்குள் தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பனாங்கொடை பகுதியை சேர்ந்த எஸ்.பி. பிரேமரட்ன (வயது 62) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி – கொடிகாமம் வீதி திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.குறித்த பணியில் தொழிலாளி ஈடுபட்டிருந்த போது, பணியில் ஈடுபட்டிருந்த றோலருக்குள் சிக்குண்டு, படுகாயமடைந்துள்ளார்.அதனை அடுத்து, சக தொழிலாளர்கள் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.