தனிமைப்படுத்தல் காலத்தை முடித்து விட்டு வீடு திரும்பியவருக்கு நடுவீதியில் ஏற்பட்ட சோகம்.!!

கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த பின்னர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட ஒரு நபரின் உடல் வீதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.55 வயதானஇந்த நபர் ஹொட்டலில் பணிபுரிந்தவர். அந்த ஹொட்டலில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.இருப்பினும், தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஹொட்டல் ஊழியர், திடீரென வீதயில் உயரிழந்துள்ளார்.அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லையென்பது உறுதியானது.