கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை!! பெருமிதம் கொள்ளும் பரீட்சை ஆணையாளர்..!

கொவிட்-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நோய் தொற்றாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஐ.டி.எச் மருத்துவமனையிலும் சில தனிமைப்படுத்தல் முகாம்களிலும் பரீட்சைகள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.கடந்த ஒக்டோபர் மாதம் 12ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் இன்றைய தினத்துடன் முடிவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக 362, 824 பேர் பரீட்சைக்காக விண்ணப்பம் செய்திருந்ததுடன் 2, 648 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.கொவிட்-19 நோய் தொற்று அபாயத்திற்கு மத்தியிலும் வெற்றிகரமாக பரீட்சைகளை நடத்த முடிந்தது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.