தாய்மார்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..விரைவில் மீள ஆரம்பிக்கப்படும் கிளினிக் சேவைகள்..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் இடை நிறுத்தப்பட்டிருந்த குழந்தைகளுக்கான கிளினிக் சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது;

இலங்கையில் கொவிட் – 19 தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இலங்கையின் பல சேவைகள் முடங்கியுள்ளன.அவற்றில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான கிளினிக் சேவையும் ஒன்றாகும்.
குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அதனை விரைவில் பாதுகாப்பான முறையில் மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.
இதேவேளை, கொவிட் – 19 இற்கு எதிராக இலங்கைக்கு உதவி செய்யும் விமானம் சீனாவிலிருந்து நேற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.