கொரோனா தொற்றில் இருந்து மேலும் 765 பேர் குணமடைவு..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 765 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றில் இருந்து இதுவரையில் 6 ஆயிரத்து 623 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.நாட்டில் இதுவரையில் 12 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்களில் 6 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரத்து 540 பர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.மேலும், இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.