யாழ்.கடற்பரப்பில் கடற்படையினரிடம் மாட்டிய 200 கிலோ கேரளக் கஞ்சா..!!

யாழ் ஆழியவளை கடற்பரப்பில் 200 கிலோ கிராமிற்கு அதிகமாக கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் பருத்தித்துறைச் பகுதியை சேர்ந்து இரு மீனவர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இன்று அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.எனினும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பொலிஸார் தம்வசப்படுத்தியதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.