வெலிக்கடை சிறைக்குள்ளும் பரவியது கொரோனா!!

வெலிக்கடை சிறைச்சாலையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர், ஆண் கைதிகள் இருவர், பெண் கைதிகள் நால்வர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களுடன் தொடர்புடைய கைதிகள் பிசிஆர் சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளனர். ஏனைய கைதிகள் அகுனுகோலபெலெச சிறைக்கு மாற்றப்படுவார்கள்.