கொரோனாவே ஓடிப் போ..இந்து மக்களிடம் அகில இலங்கை இந்து மா மன்றம் விடுத்துள்ள வேண்டுகோள்!

இனமத பேதமின்றி உலக மக்கள் யாவரும் கொரோனாத் தொற்றிலிருந்து விடுபட சுகாதார நடவடடிக்கைகளை பின்பற்றுவதுடன் கடவுளையும் பிராத்திக்கவேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்து மாமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது.இந்த பெரும் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உரிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அநாவசியமான நடமாட்டங்களையும் தவிர்த்தல் என்பன அவசியமாகிறது.தற்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் அமுல் படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் நாட்டிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் நாளாந்த நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்களவு முடங்கியுள்ளன.
இனமத பேதமின்றி உலக மக்கள் யாவரும் இந்தப் பெரும் தொற்றிலிருந்து விடுபடவும், சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றுவதுடன் கடவுளையும் பிராத்திக்கவேண்டும்.எனவே நாம் ஒவ்வொருவரும் நமக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் வீடுகளிலும், ஆலயங்களிலும் பிரார்த்தனை செய்யவேண்டும் எனவும் அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.