தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுலாக்கப்பட்டுள்ள பகுதியில் மதுபான விருந்தொன்று இடம்பெற்றுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடுமையாக அமுலாக்கப்பட்டுள்ள ஜா-எல – சுதுவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலே இந்த மதுபான விருந்து நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந்த மதுபான விருந்தில் ஈடுபட்டிருந்த 8 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.