தமது வித்தியாசமான முயற்சியினால் இலங்கை விவசாயிகளுக்கு மிகச் சிறந்த நவீன இயந்திரத்தை வடிவமைத்த யாழ் இளைஞன்.!! குவியும் பாராட்டுக்கள்.!

எமது தேசத்தில் வித்தியாசமான சிந்தனையுள்ள பலர் இருக்கிறார்கள்.அவர்களில் ஒரு சிலர் தாமாகவே தமது சிந்தனையை செயலாக மாற்றுகிறார்கள்.அதில் வெற்றி கண்டு தமது புதிய கண்டுபிடிப்பை வெளியுலகிற்கு தெரியப்படுத்துபவர்கள் ஒருசிலரே.

அவர்களில் ஒரு சிலரிற்கு தான் உரிய அங்கீகாரம் கிடைக்கின்றது.அவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவது சமூகத்தில் உள்ள அனைவரினதும் பொறுப்பு.ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இப்படி சிறந்த வழிகாட்டல்களும் ஊக்கமளிக்கும் செயற்பாடுகளும் கிடைப்பதில்லை. தமிழர்களின் தலைவிதி இப்படித் தான்.சரி விடயத்திற்கு வருவோம்.எமது விவசாயிகளுக்கு ஒர் புதிய அறிமுகமாக தாவரக் கழிவுகளை துண்டாக்கி நிலத்திற்கு உரமாக இடுவதற்கு புதிய இரண்டு சில்லு இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளார் யாழ் இளைஞர் ஒருவர்.ஆம்,யாழ் காரைநகரைச் சேர்ந்த கருணாகரன் எனும் நாமம் கொண்ட இவர் வித்தியாசமான சிந்தனையுடையவர்.இவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க இவரது நண்பர்கள் உறவினர்கள் பெரிதும் ஊக்கமளித்தனர். பல நாள் இடைவிடாத முயற்சியால் தமது இலக்கை இவர் விரைவாக அடைந்துள்ளார்.இரண்டு சில்லு உழவியந்திரத்தின் பிரதான இயந்திரத்தை கொண்டு மிகக் குறைந்த செலவில் மேற்படி இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இவ்வியந்திரத்தில் சில்லுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இயந்திரத்தை இலகுவாக நகர்த்திச் செல்ல முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.இங்கு இருக்கின்ற பல இளைஞர்களுக்கும் இவர் சிறந்த முன்னுதாரணம்.சிறந்த வழிகாட்டல்களும், சந்தை வாய்ப்பும் சரிவர அமையப் பெற்றால், கருணாகரன் போன்ற எமது இளைஞர்கள் இன்னும் சாதிப்பார்கள்.உங்கள் அயராத முயற்சிக்கு அன்பான வாழ்த்துக்கள் கருணாகரன்.